என்ன கோவை மக்களே ரெடியா..! வேற லெவலில் இருக்க போகுது அவிநாசி சாலை… வருகிறது செம அசத்தல் திட்டம்..!

கோவை: தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் டிராபிக் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் நிலையில், அதைத் தீர்க்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நமது நாட்டில் மின்னல் வேகத்தில் வளரும் நகரங்களில் டாப் இடத்தில் கோவை இருக்கிறது. இதன் காரணமாகவே மத்திய அரசும் கூட வந்தே பாரத் தொடங்கிப் பல திட்டங்களைக் கோவையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டிலும் கூட சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. இதனால் அங்கே சுற்றியுள்ள பல ஊர்களைச் சேர்ந்த மக்களும் கோவையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

கோவை: இதனால் கோவையிலும் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஐடி, தொழிற்சாலைகள் எனப் பல துறைகளில் கோவை சென்னைக்கு அடுத்து முக்கியமான இடத்தில் இருக்கிறது. பேருந்து சேவையைத் தவிர அங்கே பொது போக்குவரத்து பெரிதாக இல்லை. சென்னையைப் போல மின்சார ரயில்களோ அல்லது மெட்ரோ ரயில் சேவையோ அங்கே இல்லை என்பது பெரிய குறையாகவே இருக்கிறது.

இதனால் அங்கே டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் பீக் ஹவரில் வெளியே செல்லும் போது டிராபிக்கில் கொஞ்ச நேரம் ரோட்டிலேயே காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கிறது. டிராபிக் பிரச்சினையைத் தீர்க்க கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவிநாசி சாலை: கோவையைப் பொறுத்தவரை அங்கே அதிக டிராபிக் இருக்கும் நகரமாகக் கோவை அவிநாசி சாலை இருக்கிறது. அங்கே வாகன நெரிசல் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.. அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யும் வகையில் அங்கே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அவிநாசி சாலையில் 10.1 கிமீ நீளத்திற்கு அமையும் இந்த மேம்பாலப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே இந்தப் பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாலம்: இந்த மேம்பாலத்திற்கு மொத்தம் 306 தூண்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் 286 தூண்கள் அமைக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. மீதமுள்ள சுமார் 20 தூண்கள் லட்சுமி மில், நவ இந்தியா சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு ஆகிய இடங்களில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் அங்கு படுவேகமாக நடந்து வருகிறது.

சுமார் 45% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் நில கையகப்படுத்தும் பணிகள் கொஞ்சம் இருக்கும் நிலையில், அதுவும் முடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தால், அவினாசி சாலையில் டிராபிக் வெகுவாக குறையும்..

முன்னதாக அவினாசி சாலையை சிக்னல் இல்லாத சாலையாக மாற்றும் நடவடிக்கையைக் கோவை போலீசார் எடுத்தனர். அதன்படி அந்த சாலையில் இருந்த சிக்னல்கள் தற்காலிகமாக ஆப் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக யூடர்ன் போடும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் அவினாசி சாலையாக மாறிய நிலையில், அதற்கும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் குறிப்பிடத்தக்கது.