கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே. கே. புதூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இந்து முன்னணி பிரமுகர் . இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர் .இதில் பைக் எரிந்து நாசமானது.இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக வினோத்குமார் ( வயது 30) சபரி ( வயது 25 ) ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். விக்கி என்ற விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றுள்ளார் . அப்போது அவரை வழிமறித்து வினோத்குமார், சபரி உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது. கைதானவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0