கோவை விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து பூஜை சாமான்கள் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை குறிச்சி வெங்கடசாமி லேஅவுட்டில் அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் கோவில் உள்ளது. நேற்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கருவறையில் இருந்த சாமியின் வெள்ளி கவசம் ,பித்தளை பூஜை சாமான்கள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் செயலாளர் லீலா கிருஷ்ணன் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..