தமிழகத்தின் நுண்ணறிவு பிரிவில் புதிதாக பயங்கரவாத தடுப்புப்பிரிவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை :”தமிழக நுண்ணறிவுப் பிரிவில், புதிதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு, 57.51 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்.
சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும். காவலர்களுக்கு சீருடை படியாக, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் வழங்கப்படும்,” என்பது உட்பட, 101 அறிவிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: டி.எஸ்.பி., முதல் எஸ்.பி., வரையிலான அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் செலவில், 976 ‘லேப்டாப்’ வழங்கப்படும் நுண்ணறிவுப் பிரிவில், இன்ஸ்பெக்டர் முதல் கூடுதல் எஸ்.பி., வரையிலான அதிகாரிகளுக்கு, 1.01 கோடி ரூபாயில், 247 ‘லேப்டாப்’ வழங்கப்படும் குற்றவாளிகளை கைது செய்ய, ‘ரிமோட்’ வழியே விலங்கிடும் கருவிகள், 75.07 லட்சம் ரூபாய் செலவில், 25 வாங்கப்படும் ‘க்ரிப்டோ கரன்சி’ மோசடியை கண்டுபிடிக்க, செயின் பகுப்பாய்வு ‘ரியாக்டர்’ கருவி, ஒரு கோடி ரூபாயில் வாங்கப்படும் குற்ற வழக்குகளை, கள நிலையில் புலனாய்வு செய்ய, காவல் அதிகாரிகளுக்கு 450 கையடக்க கணினி, 1.12 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, 250 போலீஸ் நிலையங்களில், 10 கோடி ரூபாயில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் மாநில குற்ற ஆவண காப்பகத்தில், மென்பொருள் வல்லுனர்களின் துணையுடன், மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார்; கரூர் மாவட்டம் நங்கவரம்; காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை; வேலுார் மாவட்டம் பிரம்மபுரம்; பெரம்பலுார் தாலுகா என, ஐந்து தாலுகா காவல் நிலையங்கள், 12.91 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மாநில நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு, 57.51 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி போலீஸ் நிலையங்கள், சேலம் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் கோவை மாவட்டத்தில் உள்ள, துடியலுார், கவுண்டம்பாளையம், வடவள்ளி போலீஸ் நிலையங்கள், கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் நிலையம், திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன்; திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருப்பாலைவனம் போலீஸ் நிலையங்கள், ஆவடி மாநகர போலீஸ் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் வேலுார் மாவட்டத்தில், அணைக்கட்டு போலீஸ் உட்கோட்டம்; கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் போலீஸ் உட்கோட்டம்; விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டி போலீஸ் உட்கோட்டம் ஏற்படுத்தப்படும் தென்காசி மாவட்டம் புளியறை; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி; தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில், சோழபுரம்; தாம்பரம் பெரும்பாக்கம், ஓட்டேரி போலீஸ் நிலையங்களுக்கு, புதிய கட்டடம் கட்டப்படும் கடலுார் மாவட்டம், திருப்பாதிரிபுலியூரில் டி.எஸ்.பி., அலுவலகம்; சேலம் மாநகர ஆயுதப்படைக்கு அன்னதானப்பட்டியில், மோப்பநாய் கூடம் அமைக்கப்படும். 137 போலீஸ் நிலைய கட்டடங்கள், 10 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் புதிதாக 200 இரு சக்கர வாகனங்கள்; 283 நான்கு சக்கர வாகனங்கள்; ஐந்து நான்கு சக்கர இழுவை வாகனங்கள்; ஐந்து இரு சக்கர இழுவை வாகனங்கள் வாங்கப்படும் புதிய பிரிவு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வதற்கு, தனிப்பிரிவு உருவாக்கப்படும் மாவட்ட குற்றப்பிரிவு, மாநகர குற்றப்பிரிவு ஆகியவற்றை பலப்படுத்த, தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு ஒன்றிணைக்கப்படும் காவலர் பயிற்சிக் கல்லுாரியில் பணியாற்றும், அதிகாரப்பூர்வ விரிவுரையாளர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் தடய அறிவியல் துறை திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில், புதிதாக மரபணு ஆய்வுப் பிரிவு உருவாக்கப்படும் கோவை, ராமநாதபுரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில், போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் அமைக்கப்படும் தீயணைப்புத்துறை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம்; திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்; திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம்; கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஆகிய இடங்களில், புதிய தீயணைப்பு நிலையங்கள், 7.25 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் திருநெல்வேலியை தலைமையிடமாக வைத்து, புதிய மண்டலம் உருவாக்கப்படும் தீயணைப்பு நிலையங்கள் பயன்பாட்டுக்காக, 26.25 கோடி ரூபாயில், 35 நீர் தாங்கி வண்டிகள்; 18.90 கோடி ரூபாய் மதிப்பில் பெரும் தண்ணீர் லாரிகள் கொள்முதல் செய்யப்படும் தீயணைப்புத் துறை மாவட்ட, மண்டல அலுவலர்கள் பயன்பாட்டுக்கு, புதிதாக ஏழு ஜீப்புகள் 59.26 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் தீயணைப்புத் துறை பணியாளர்களுக்கு, தற்போது அரசால் வழங்கப்படும், சேமநல நிதிக்கான மானியம், 20 லட்சம் ரூபாய், 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் தீயணைப்புத்துறைக்கு சட்ட விவகாரத்தில் உதவிட, இயக்குனரகத்தில் புதிய சட்ட ஆலோசகர் பணி உருவாக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார். காவலர்களுக்கு சீருடை மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்து வழங்குவதற்கு பதிலாக, சீருடைப் படி மாதம் 4,500 ரூபாய் வழங்கப்படும் காவலர் முதல் சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் வரையிலான காவல் பணியாளர்களுக்கு, எரிபொருள் படி மாதம் 370 ரூபாய் என்பது 515 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு, வார விடுமுறை அளிக்கப்படும் காவலர் அங்காடி வசதி, மருத்துவமனை வசதி, ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுப்படுத்தப்படும்.