வந்தே பாரத் வெற்றி பயணம்… கேரளாவில் 2வது முறை சோதனை..!

பாலக்காடு: திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை, ‘வந்தே பாரத்’ ரயிலின், இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்தது.
கடந்த 17ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணுார் வரை, ‘வந்தே பாரத்’ ரயிலின் முதல் கட்ட வெள்ளோட்டம் நடந்தது. அப்போது 7 மணி 10 நிமிடங்களில் கண்ணூர் அடைந்தது. நேற்று, இரண்டாவது கட்ட சோதனையாக, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, காலை 5:20க்கு புறப்பட்ட ரயில், 7 மணி 50 நிமிட பயணமாக, மதியம் 1:10க்கு காசர்கோடு ஸ்டேஷனை அடைந்தது.எட்டு பெட்டிகள் கொண்டு, வரும் 25ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டு காசர்கோடு சென்றடையும்.