மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்ணறு (பேஸ்- I) ஹட்கோ காலனியை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 68) கூலி தொழிலாளி .நேற்று இவர் அவரது வீட்டில் சுவிட்சை அழுத்தி லைட் போட்டார்.அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது..