தொழிலில் நஷ்டம்… கோவை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள கே. கே. புதூர், அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 69) வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார் .இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கதுரை நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி லீலாவதி துடியலூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.