மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றதாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இத்திருக்கோயிலில் விஷேச நாட்களில் சாமி முன்பாக உலா வருவதற்காக அங்கையற்கண்ணி, பார்வதி என்ற இரு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அங்கையற்கண்ணி கடந்த 2007ம் ஆண்டு வயது முதிர்வால் உயிரிழந்தது. தற்போது கோவிலில் பார்வதி யானை மட்டுமே உள்ளது. இதனால் அந்த யானையின் நினைவைப் போற்றும் வகையில் 45 லட்ச மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இதைபோன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்த அவ்வை யானையும் கடந்த 2012ம் ஆண்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பசு மடத்தில் அவ்வை யானைக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு 30 லட்சத்து 67 ஆயிரம் 56 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.