மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 10-ந்தேதி வெளியிட்ட கட்டண விகித பட்டியல் மாற்ற உத்தரவில் பிரிவு 5.8.5 அல்லது 8.6-ன் படி, ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் 2 மின் இணைப்புகளை வழங்குவது. ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் அவற்றை இணைப்பது குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக
மின்வாரியத்துக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி,
ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும்.
ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தால், அதை முறையான நோட்டீஸ் கொடுத்து கட்டண விகித பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும். நுகர்வோர் இணைப்பதற்கு முன்வரா விட்டால் அதை 1-டி கட்டண விகித பட்டியல் ஆக மாற்ற வேண்டும்.
மின் வாரியம் மின்இணைப்பு கொடுக்க அந்தப்பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
சிலர் ஒரே வீட்டில் சொந்த பந்தங்களாக, அண்ணன்- தங்கைகள், அக்காள்- தம்பிகள், தந்தை- மகன், தந்தை- மகள் என்று தனித்தனி குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ, குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், இதுபோன்ற குடும்பங்கள் உள்ள முறையாக பிரிக்கப்பட்ட குடியிருப்பில் அங்கு மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால், அம்மாதிரி இடங்களில் தனி ரேஷன் கார்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.