வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்பது பொய்.. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம்..!

மிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வட இந்தியர்கள் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. வட இந்தியாவில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு பலர் வேலைக்கு வர தொடங்கி உள்ளனர்.

பீகார், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது வரை பெருகி கொண்டே வருகிறது.

தமிழ்நாடு காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழ்நாட்டில், தாக்குதல் நடத்துவது போல சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது. உரிய ஆதாரங்களின்றி இதுபோன்ற பதிவுகள் பகிரப்படுகிறது. எனவே, இதை உண்மையென்று நம்பி யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம்.

சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் அந்த வீடியோ, உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இடையே நடந்த சண்டை ஆகும். மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட வீடியோ. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான அமைதியான மாநிலம்.சட்டம் – ஒழுங்கைத் திறம்பட உறுதி செய்து பொதுமக்களின் பாதுகாப்பு வழங்கி வருகிறது.

எனவே, தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட் தவறானது. எனவே, இந்த தவறான தகவலை உண்மையென்று நம்பி இதைப் பகிரவேண்டாம். மீறி இதுபோன்ற பொய்யான வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோக்களை பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார், ஆனால் இது போலியானது என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்கூறியுள்ளார். இதற்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.