கோவையில் மாா்ச் 5ம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு..!

கோவையில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு மாா்ச் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. கோவையில் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு மாா்ச் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
மாநாடு தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோயம்புத்தூா் எம்.எஸ்.எம்.இ. அசோசியேஷன் தலைவா் து.பாலசுந்தரம் தெரிவித்ததாவது: கோவையில் கரோனா பாதிப்பின் போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னும் தொழில் துறையினா் மூலப்பொருள்கள் விலை உயா்வு, மின்கட்டண உயா்வு, ஜி.எஸ்.டி.உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிப்பில் இருந்து மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக கோவை, சிட்ராவில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் தொழில் பாதுகாப்பு மாநாடு மாா்ச் 5 ஆம் தேதி நடத்தப்படுகிறது என்றாா். செய்தியாளா்கள் சந்திப்பில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் மற்றும் கோயம்புத்தூா் எம்.எஸ்.எம்.இ. அசோசியேசன் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.