அமெரிக்க அதிபர் உக்ரைன் வந்து சென்ற நிலையில், ரஷ்யாவிற்கு சீன அதிபர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று முன் தினம் திடீர் பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தடுத்து அமைதி பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையை முன்வைத்து சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளார்.
முன்னதாக உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்பவில்லை, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதில் குளிர்காய நினைக்கிறது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.