உலகின் 40% டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் தான் நடக்கிறது- ஜெ.பி.நட்டா பெருமிதம்..!

புதுடில்லி: உலகின் 40 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கிறது என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார்.புதுடில்லியில் ‘மோடி ஷேப்பிங் எ குளோபல் ஆர்டர் இன் ப்ளக்ஸ்’ என்ற தலைப்பில் புத்தகத்தை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார்.விழாவில் நட்டா பேசியதாவது: டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
உலகின் 40 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கிறது. டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவதை கண்டு உலகமே இந்தியாவை பாராட்டியது. வரும் காலங்களில், உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பான கேள்விகளுக்கு இந்தியா பதிலளிக்கும். பிரதமர் மோடி எடுத்த முயற்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இந்த புத்தகம் அதைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.