பெங்களூர் : சந்திரயான் 3 விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கள் என இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் iஉந்து விசை, லேண்டர் மற்றும் ரோவர் என 3 முக்கிய தொகுதிகளை கொண்டது.
அடுத்ததாக தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ அலைவரிசை தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான சிக்கலான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும் சந்திரயான் 3 விண்கலம் மிகவும் வலிமையானதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விண்கலத்தில் ஒரு கருவி பழுது அடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெளிவுப்படுத்தி உள்ளது. மேலும் சந்திரயான் 3 விண்கலம் வருகிற ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.