இனி மின் கட்டணம் செலுத்த தேவையில்லை- இதை மட்டும் பொருத்தினால் போதும்..!

நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த விருப்பப்பட்டால் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொறுத்தவேண்டும்.

இது உங்களது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்கும். சோலார் பேனல்களை அமைப்பதற்கு மத்திய அரசானது மானியப்பணம் கொடுக்கிறது. இதற்கு முதலாவதாக உங்களின் மின்சாரம் நுகர்வை மதிப்பிடவும்.

உங்கள் வீட்டில் நாளொன்றுக்கு எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு, அதன்படி வீட்டில் சோலார் பேனல் பொருத்தப்படும். 2 கிலோவாட் சோலார் பேனல் அமைப்பதற்கு 40 சதவீதம் மானியம் கிடைக்கும். இதன் விலையானது 1 லட்சத்து 20 ஆயிரம். எனினும் மானியத்திற்கு பின் 72 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.

இதில் உங்களுக்கு அரசிடம் இருந்து ரூபாய்.48,000 தள்ளுபடி வழங்கப்படும். மற்றொருபுறம் 500 KV வரை சோலார் கூரை நிறுவப்பட்டால், அதில் மத்திய அரசு 20 சதவீதம் மானியம் வழங்கும். சோலார் பேனலின் ஆயுள்காலம் 25 வருடங்கள் ஆகும். சோலார் பேனலை நிறுவுவதன் வாயிலாக நீங்கள் நீண்டகாலத்திற்கு மின் கட்டணத்திலிருந்து விடுபடலாம்.