பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இனி ஜெயில் தான்! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு!
போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேல் கூரையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு விளைவித்தனர்.அதனை தொடர்ந்து இனி பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அந்தந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தான் பொறுப்பு என அறிவித்தது.
அதனை தொடரந்து போக்குவரத்து விதிகளை மீறினால் அதற்கென அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனாலும் சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து தான் வருகின்றனர்.அவ்வாறு பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் உடனடியாக பேருந்தை நிறுத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்போது மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் பேச்சை கேட்கவில்லை என்றால் உடனடியாக போலீசில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து வருகின்றது.
இதனை தடுக்கும் விதமாக தான் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது 100 எண்ணை அழைத்தோ புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.