இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் வரும் – அண்ணாமலை..!

சென்னை: விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வழங்கினார். சுவாசம் என்ற பெயரில் 234 தொகுதிகளில் பா.ஜ., சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

பின், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

ஈரோடு கிழக்கு, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது. 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். பா.ஜ., சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பார்.

பாஜ., அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது. விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.