4-வயது குழந்தையுடன் தாய் எங்கோ மாயம்..!

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல், கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ரம்யா ( வயது 24)இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 24 ஆம் தேதி தனது 4 வயது மகன் கவினுடன் எங்கோ சென்று விட்டார் .இது குறித்து விஜயன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து ரம்யாவையும் கவினையும் தேடி வருகிறார்கள்.