சென்னையில் குடியரசு தின விழா ஒத்திகை… 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி..!

நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா நாளை மறுநாள்  கொண்டாடப்பட உள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு முதல்முறையாக கொடியேற்றிவைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பாக நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கொடியேற்றி வைக்கவுள்ளார். இதனையடுத்துஇதனையடுத்து குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி இரண்டாவது கட்டமாக இன்று நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

முப்படை ,தேசிய மாணவர் படை ,மத்திய தொழில் பாதுகாப்பு படை ,காவல் துறை ,தீயணைப்புதுறை அணிவகுப்பும் ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர். கொரானா பாதிப்பு காரணமாக குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்காமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது. வழக்கமாக குடியரசு தின விழா காந்தி சிலை அருகே நடைபெற்று வந்த நிலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுவது குறிப்பிட்டதக்கது.