மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் சிறக்கும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

ம்பம்- -‘மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் சிறக்கும்’ என கம்பத்தில் நடந்த அ.தி.மு.க.., பிரமுகர்கள் இல்ல திருமணத்தை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைத்து வாழ்த்தினார்.கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கூடலூர் முன்னாள் நகராட்சி தலைவர் அருண்குமார்- நிரந்தரி தம்பதியர், முன்னாள் எம்.எல்.ஏ. ராமராஜ் –உமாபதி ஆகியோரின் பிள்ளைகள் சச்சின்ராம், பிரதிஷ்டாதேவி திருமணம் நடந்தது. இத் திருமணதை அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியவர்கள் கூறுவார்கள், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு இன்பமான நாள் திருமண நாள். திருமண நாள் மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய முக்கிய நாளாகும், திருமணம் சாதாரண விசயமல்ல. ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை பெற்று சீராட்டி வளர்த்து திருமணம் முடித்து உறவினர்கள் வாழ்த்து பெறும் முக்கிய நாளாகும். மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லறம் சிறக்கும். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்களை வாழ்த்துகிறேன் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, கூடலூர் நகர் துணை செயலாளர் பாலைராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வரவேற்பு: முன்னதாக தேனி அருகே மதுராபுரியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேனி மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர் அன்னப்பிரகாஷ், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராமர், ஆண்டிபட்டி அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன் உள்பட பலர் வரவேற்றனர்.