புதுடில்லி : ‘வேலுார் சி.எம்.சி., கல்லுாரி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், 70 சதவீதத்தை, ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு அளிக்கும் பட்டியலில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் சி.எம்.சி., கல்லுாரி நிர்வாகம், 2021-22ம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அளித்த கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர் பட்டியலை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதன் விபரம்: சி.எம்.சி., கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், 70 சதவீததத்தை, ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு அளிக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.30 சதவீத இடங்களை, 2020-21ம் கல்வியாண்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைப்படி நிரப்ப வேண்டும். இந்த உத்தரவு, இந்த கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும். இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0