ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனால் அந்த தொகுதியில் ரொக்கமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் விவி பேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மூன்று பறக்கும் படை மற்றும் மூன்று கண்காணிப்பு குழு அமைக்கப்படும். ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.