அமெரிக்கா: 38 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது.
2450 கிலோ எடையுள்ள காலாவதியான செயற்கைக்கோள், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவில் பூமியை நோக்கி விழும் என நாசா தகவல் அளித்துள்ளது. சுற்றுப்பாதையில் இறங்கி புவியீர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழைந்த உடனே, செயற்கைக்கோள் தீப்பிடித்து எரிந்துவிடும். எனினும் எரியாத சில பகுதிகள் மட்டும் பூமியில் வந்து விழும் என நாசா விளக்கம் அளித்துள்ளனர்.