சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சென்னை இலக்கிய திருவிழாவில் 108 நூல்களை வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய முதல்வர்; திமுக ஆட்சியில் தமிழுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சென்னை கடற்கரையில் தமிழ் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டன. திமுக ஆட்சி என்பது தமிழாட்சி. கடந்த ஓராண்டுகளில் ஏராளமான தமிழ் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. தமிழுக்காகவே நாம் இங்கே கூடி இருக்கிறோம்.
பொங்கல் தினத்துக்கு மறுநாள் திருவள்ளுவர் தினமாக அரசு விடுமுறையுடன் அறிவித்தது திமுக. மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம், மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம். வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத சின்னமாக இருக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில் தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர் தான்.
மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியது திமுக அரசு. இன்று பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழில் படிக்கலாம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் இலக்கிய உணர்வை ஓட்டியாக வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும் இவ்வாறு கூறினார்..