2022ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் அதிகமாக வாகனங்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்துள்ளது.
2022ம் ஆண்டு முடிந்துவிட்டது. நாம் எல்லோரும் 2023ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். தற்போது இந்நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் வாகன தயாரிப்பு குறித்த அறிக்கையை வெளியிடத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்தியாவிலும் 2022ம் ஆண்டு மொத்தம் தயாரான வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்த 44 லட்சம் வாகனங்கள் தயாராகியுள்ளது. இது உலக நாடுகளில் அதிகமான கார்களை தயாரித்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 3வது இடத்திலிருந்து ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்கெட்டாக மாறியுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிறுவனம் சீனா. இந்நாட்டில் மொத்தம் 2.48 கோடி வாகனங்கள் மொத்தம் கடந்த 2022ம் ஆண்டு விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும் போது 3.60 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். அடுத்தாக இரண்டாவது இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 1.38 கோடி வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு கார் விற்பனையை ஒப்பிடும் போது 2022ம் ஆண்டு 8.30 சதவீதம் விற்பனை சரிவு ஏற்படும்.
மூன்றாவது இடத்தில் இந்தியா 44லட்சம் வாகனங்களை விற்பனை செய்து 3வது இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த 2021ம் ஆண்டை விட 23.40 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதாவது இந்தியாவில் அதிகமான மக்கள் வாகனங்களை வாங்கத் துவங்கிவிட்டனர். இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் ஜப்பான் 42 லட்சம் கார்களை விற்பனை செய்து 4வது இடத்தில் இருக்கிறது. ஜப்பானில் விற்பனை கடந்தாண்டு 4.40 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த பட்டியலில் 5வது இடத்தில் ஜெர்மனி நாடு இருக்கிறது. இந்நிலையில் மொத்தம் 28 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த நாட்டிலும் 2022ம் ஆண்வு மொத்தம் 2.90 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியல் அந்தந்த நாடுகளில் வெளியான தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா கடந்த 2022ம் ஆண்டு மொத்தம் 50 லட்சத்திற்கு அதிகமான வானகங்களைத் தயாரித்துள்ளது. இது தொடர்ந்து 4வது ஆண்டாக நடந்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளின் விற்பனை நிலவரங்களைப் பார்க்கும் போது கியா, எம்ஜி, சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் புதிதாகக் களம் இறங்கிச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. அதே போல ஃபோர்டு, ஜெனரல் மோட்டாஸ், டட்சன் ஆகிய நிறுவனங்கள் இந்திய மார்கெட்டிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்தியா சுஸூகி நிறுவனத்திற்கு இரண்டாவது பெரிய மார்கெட்டாக இருக்கிறது. இது போக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது எம்க்யூபி ஏ0 ஐஎன் என் பிளாட்ஃபார்மிற்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது போக ஹூண்டாய், ரெனால்ட், நிஸான், ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், கியா ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் சிறப்பாக விற்பனையைச் செய்து வருகிறது.
ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகனை அடுத்து ரெனால்ட்-நிஸான் கூட்டு நிறுவனம் இந்தியாவிற்கு அதிகமான முதலீடுகளைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. அதே போல டாடா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய முதலீட்டை எலெக்ட்ரிக் வாகனங்களுக்காகச் செய்து வருகிறது. வருங்காலத்தில் இந்தியாவில் வாகன உற்பத்தியும் அதிகமாகும். விரைவில் சீனா, அமெரிக்கா நாடுகளுக்குப் போட்டி போடும் வகையில் இந்தியாவும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.