கோவை: பொள்ளாச்சி டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 32). கூலி தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மருதமுத்துவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் குடிபோதையில் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்ன்று மருதமுத்து குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர்
கோவை சின்னவேடம்பட்டி உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (36). பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களாக மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்வப இடத்துக்கு வந்து பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.