திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள பருவாயை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பவர்லூம் தொழிலாளி. இவரது மகன் பிரவீன் குமார் (வயது 19) தனியார் கல்லூரியில் இ.சி இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கோவை சவுரிபாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த தனது நண்பர் ஸ்ரீஹரி ( வயது 19) என்பவருடன் பைக்கில் காளப்பட்டி-விளாங்குறிச்சி ரோட்டில்சென்று கொண்டிருந்தார். அங்குள்ள நால்ரோடு சந்திப்பில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த பிரவீன் குமார், ஸ்ரீஹரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பிரவீன் குமார் அதே இடத்தில் பலியானார். ஸ்ரீஹரி படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து இவரது தந்தை சண்முகசுந்தரம் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.