கோவை அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவா ரவிச்சந்திரன் .இவரது மனைவி கீதா மணி இவர்கள் இருவரும் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேரூர் காளம்பாளையத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகினர். அப்போது அந்த நிறுவனத்தின் அதிபரும் நிர்வாக இயக்குனருமான ஜெகதீஸ்வரன் 30 சதவீதம் பணம் கொடுத்தால் தங்களது நிறுவனம் சார்பில் இடத்துடன் வீடு கட்டி தருவதாகவும், மீதி தொகை வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்படும் என்று தெரிவித்தார் -இதை நம்பி அவர்கள் 2 தவணைகளாக ரூ6 லட்சத்து 30 ஆயிரத்து ஜெகதீஸ்வரனிடம் கொடுத்தனர். உடனே அவர்களுக்கு தீத்திபாளையம் பகுதியில் வீடு கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் நிலம் வழங்கப்பட்டது .அந்த இடத்தில் வீடு கட்ட கீதா மணி ரவிசந்திரன் குடும்பத்தினர் பூமி பூஜை செய்தனர் .அதே இடத்தில் 2 நாட்கள் கழித்து மற்றொரு குடும்பத்தினர் வீடு கட்ட பூமி பூஜை போட்டனர் .இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா மணி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டனர். உடனே அவர் ரூ 6.லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். அதை கீதா மணி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கீதா மணி,ரவிச்சந்திரன் ஆகியோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீடு கட்டி தருவதாக கூறி 65 பேரிடம் இவர் ரூ.3 கோடி பணமோசடி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார்,முகமது ரபி, உமாதேவி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி ,ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய விஜயகுமார், முகமது ரபி, உமாதேவி ஆகிய 3 பேரை விடுதலை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0