தமிழகம் முழுவதும் ஜன.5ம் தேதி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..!

சென்னை: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது.

அதைதொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்திராஜன், ஆ.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறைகளில் அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல் இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் ‘அவுட்சோர்சிங்’ முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜன.5-ம்தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றனர்.