அவங்க என்னமோ ஐநா சபையின் தலைவர் போன்று பேசுகிறார் … சசிகலாவுக்கு ஜெயக்குமார் பதிலடி..!

மிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனமான எம்ஜிஆர் அவர்களின் 35வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவு நேரத்தில் அஞ்சலி செலுத்திய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் “கீழ்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கி விட்டேன்” என சசிகலா கூறியது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் “சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சசிகலாவுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைப்பதற்கான பணிகளை வேண்டுமானால் மேற்கொள்ளலாம். ஆடு நனையுதே என ஓநாய் அழ கூடாது. அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் எழுச்சி மிக்க தொண்டர்கள் திரண்டு உள்ளனர்.

அவ்வாறு இருக்கும் பொழுது சசிகலாவின் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் என்னமோ ஐநா சபையின் தலைவர் போன்றும் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்ப்பது போன்றும் பேசுகிறார். சில பேர் அதிமுகவை விட்டு சென்றார்கள். அவர்கள் எல்லாம் தேவையற்றவர்கள், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என சசிகலாவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார்.