தமிழக அரசின் துரித நடவடிக்கையால் தான் பெரும் சேதம் தவிர்ப்பு – அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!

மாண்டஸ் புயலுக்கு முன்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நுங்கம்பாக்கம் , பூந்தமல்லி , புழல் பகுதிகளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் ஏழு சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. சென்னையில் பெய்த கனமழையினால் சென்னை அண்ணா சாலை , திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை, வடபழனி பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் மழையினால் இருள் சூழ்ந்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டு ஒட்டி செல்கின்றர். சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருக்கின்றன.

இந்த நிலையில், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்பக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. 400க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.