நரம்பு சுருள் நோய் இருக்கா? இதை மட்டும் செய்யுங்கள்! 5 நாளில் இருந்த இடமே தெரியாது
வயது முதிர்வு உடல் பருமன் மற்றும் நின்று கொண்டே வேலை செய்வது போன்ற பல காரணங்களால் வெரிகோஸ் என்னும் நரம்பு சுருள் நோய் ஏற்படுகிறது. அதாவது முழங்காலுக்கு கீழே காலின் பின்புறத்தில் உள்ள ரத்த குழாய்களில் முடிச்சு போன்று ஏற்பட்டு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டே வேலை செய்பவர்கள் பெரும்பாலானோருக்கு வெரிகோஸ் வெயின் என்ற நரம்பு சுருள் நோய் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் கால்களின் நரம்பு சுருண்டவாறு காணப்படும்.
குறிப்பாக உடல் பருமன் இருப்பதாலும் இந்த பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் அதிக உடல் எடை காரணமாக இந்த நோயானது ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் மற்றும் அதிக தூரம் அல்லது நேரம் நடக்க வேண்டிய சூழல் உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் கால்களில் வலி ஏற்படும். இந்நிலையில் உடனடியாக உட்கார்ந்தாலும் அல்லது படுத்தாலோ இந்த வலியானது குறையாது. அதே நேரத்தில் கால்களை சற்று உயரமாக தூக்கி வைத்தால் சில நிமிடங்களிலேயே இந்த வலியானது குறைந்து விடும்.
இது இந்த வெரிகோஸ் வெயின் என்ற நரம்பு சுருள் நோயின் ஆரம்பகால அறிகுறி ஆகும். இந்த நேரங்களில் கால்களில் அவ்வப்போது வீக்கமும் ஏற்படலாம். அந்த வகையில் இந்த ஆரம்ப கால நிலையில் முறையான சிகிச்சை செய்தால் இந்த நோயை சரி செய்து விடலாம்.
இந்த நிலையில் முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டால் நரம்புகள் சுருள்வது, இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, இதனால் ரத்தம் தேங்கி நரம்புகள் சுருண்டு கால்கள் கருப்பாக மாறுவது, மேலும் புண்கள் ஏற்படுவது போன்ற அதிதீவிர அறிகுறிகள் ஏற்படும். இதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.
நமது உடலில் ரத்தமானது இதயத்தில் இருந்து ரத்த நாளங்கள் வழியாக கீழ் உள்ள கால்களுக்கு வரும் அதே போல இங்கிருந்து மீண்டும் ரத்த குழாய் வழியாக அதியத்திற்கு ரத்தமானது செல்லும்.
இந்நிலையில் ஒருவர் நீண்ட நேரம் இருப்பதால் தோலின் அடியில் செல்லும் இந்த ரத்த குழாய்களில் ரத்தம் தேங்காமல் இருக்க செய்யும் வால்வுகள் தொடர்ந்து மூடியபடி இருக்கும். இதனால் பல மணி நேரம் மூடியபடி இருக்கும் இந்த ரத்த வாழ்வுகள் சில நேரங்களில் பலவீனமாகி உடைந்து விட வாய்ப்புள்ளது. அந்த வகையில் அந்த இடம் பலூன் போல வீங்கி ரத்த ஓட்டமே இல்லாமல் பாம்பு சுரண்டது போல நரம்புகளும் சுருண்டு விடும். இதுவே நரம்பு சுருள் நோய் என்று கூறப்படுகிறது.
இந்த நோயானது மரபியல் காரணங்களாலும் வரலாம் என்று கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் கனம் அதிகம் இருப்பதால் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அதன் மூலமாக நரம்பு சுருள் நோய் வரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல அடிவயிறு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு அதிகம் இருப்பதாலும் கால்களில் அழுத்தம் ஏற்பட்டு இந்த பிரச்சனையானது வர வாய்ப்பு உண்டு.
இதனால் கால்களில் வீக்கம் மற்றும் அதிபயங்கற கால் வலி ஏற்படுகிறது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஐந்து நாட்களில் முற்றிலும் சரி செய்யலாம்
தேவையான பொருட்கள்:
கருந்துளசி கைப்பிடி அளவு,
கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை சோறு,
வசம்பு,
மஞ்சள் தூள்.
செய்முறை:
கருந்துளசி,கற்றாழை ஜெல், வசம்பு மற்றும் மஞ்சள் தூள் இவை அனைத்தும் சேர்ந்து அரைத்து நரம்பு சுருள் ஏற்பட்ட இடத்தில் இரவு நேரங்களில் பூசி வந்தால் முதலில் வீக்கம் படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகி நிரந்தரமாக நிவாரணம் தரும்.