கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதியிடம் செல்போன் பறிமுதல் – அதிகாரிகள் தீவிர விசாரணை..!

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தனி பிளாக்கில் உள்ளனர் . இந்த கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்களா? என்று நேற்று சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கைதிகள் யாராவது செல்போன் பயன்படுத்துகிறார்களா ?என்பது குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.