இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு..!

ரண்டாவது முறையாக மக்களை சந்தித்த சென்ற மன்னர் சார்ல்ஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மரணத்துக்கு பிறகு மன்னராக பதவியேற்றுள்ள 3ம் சார்ல்ஸ், நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மக்களை சந்திக்கிறார். இரண்டு முறை மக்களை சந்திக்கும் போது , அவர் மீது முட்டை வீசப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மறைவிற்கு பிறகு , இறுதி சடங்ககுகளை முடித்து விட்டு தற்போது பொதுமக்களை 3ம் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா சார்லஸ் சந்தித்து வருகிறனர். இந்த சந்திப்பின் போது பொதுமக்களிடம் உரையாடி வாழ்த்துப்பெறு வருகின்றனர். ராணி 2ம் எலிசபெத்தின் மறைவிலிருந்து மீண்டு வந்த அரச குடும்பத்தை இங்கிலாந்து மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆறுதலையும், வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில், மக்களுடன் சார்லஸ் உரையாடி கொண்டிருக்கும் போது எதோ ஒரு பொருள் அவர் நின்ற திசை நோக்கி வந்து கீழே விழுந்து உடைந்தது. யார் எறிந்தார்கள் என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து பொருட்கள் வீசப்பட்டு அவைகளும் உடைந்து சிதறின. மேலும் ” நீங்கள் எங்கள் மன்னர் அல்ல” என்று கோஷங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவதிற்கு பிற்கு உடனடியாக மன்னர் சார்லஸை பாதுகாப்பு அதிகாரிகள் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு மக்களை முதல் முறையாக சார்லஸ் சந்திக்க வந்துள்ளார். அப்போது இரண்டு முறையும் இதே சம்பவம் நடந்துள்ளது பெரும் சோகத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பாதுக்காப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரே சம்பவம் இரண்டு முறை அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியாகியிருக்கிறது. இதனால் மேலும் மன்னரின் பாதுகாப்பு கூடுதலாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தின் மீது இங்கிலாந்து மக்களுக்கு என்றென்றும் அன்பும் மரியாதையும் இருக்கிறது. இருப்பினும் 3ம் சார்லஸ் மன்னரானது பொதுமக்களில் சிலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.