தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன்..

கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன் .இவர் கஞ்சா, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் சரிவரபள்ளிக்கூடம் செல்வதில்லை .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தந்தை பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.