வேலை வாங்கி தருவதாக கூறி 100 மேற்பட்டவர்களிடம் 2 கோடி மோசடி செய்த நபர் கைது..!

கோவை கவுண்டம்பாளையம் சேர்ந்தவர் கதிரவன் கார் டிரைவர். இவருக்கு நண்பர்கள் மூலம் சிங்காநல்லூர் சேர்ந்த பிரான்ச் சேவியர் செல்வராஜ் என்பவர் அறிமுகமானார். இவர் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருவதாக கூறினார். இதை அடுத்து கதிரவன் தனது காரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகை ஓட்ட அனுமதி அளிக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூபாய் 2 1/ 2 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். அதை நம்பி கதிரவன் ரூபாய் 2 1/ 2 லட்சம் கொடுத்து உள்ளார். அதற்கு அவர் பத்திரத்தில் ஒப்பந்தம் தொடர்பாக கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுப்பதாக கூறினார். ஆனால் அதற்கு ஒப்பந்தத்தை கொடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. எனவே தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கதிரவன் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நின்று இருந்த பிரான்சி சேவியர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீசார் கூறியதாவது

பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் வாடகைக்கு கார் ஒப்பந்தம் செய்வதாக கூறி மட்டுமல்லாமல் வேலை வாங்கி தருவதாக கூறி 100 க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். அந்த பணத்திற்கு பல்வேறு பகுதிகளில் லாட்ஜ் எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இது குறித்து விசாரணையில் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.