50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. கரூரில் ஆணைகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

ரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை மனமகிழ்வாடு வழங்கி பேசினார்.

இந்த விழாவை தொடர்ந்து திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார்.

கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கோவை, ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

கோவை-ஈரோட்டில் ஸ்டாலின் திமுகவை சேர்ந்தவரும், உடல்நலக்குறைவால் இறந்தவருமான கோவை தங்கத்தின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். அதன்பிறகு ஈரோட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் தான் இன்று கரூர், திண்டுக்கல் மாவட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று கரூர் மாவட்டம் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் பகுதியில் அரசு விழா நடத்தப்பட உள்ளது. இதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இன்று காலை நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதற்கட்டமாக 6 மாதத்துக்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 2வது கட்டமாக தற்போது 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். விவசாயிகளும் திரளானவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் செல்கிறார். மாலையில் திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.