கனடா அரசு, இம்மாதத்தை இந்து சமய பாரம்பரிய மாதமாக கொண்டாடும் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புடவையில் பங்கேற்று ஜொலித்துள்ளார்.
கனட அரசு, இம்மாதத்தை இந்து சமயத்தின் பாரம்பரிய மாதமாக கொண்டாட தீர்மானித்திருக்கிறது. கனடா நாட்டில், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே தங்கள் நாட்டின் வளர்ச்சியில் இந்து சமயத்தின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் தடவையாக இம்மாதத்தை தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கடைபிடிக்கவிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்கிருக்கும் விஷ்ணு மந்திரில் இந்து பாரம்பரிய மாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் தமிழ் பெண் அனிதா ஆனந்த் புடவை அணிந்து பங்கேற்றிருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தன் இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில், நான் விஷ்ணு மந்திரில் நேற்று நடந்த பாரம்பரிய மாத விழாவில், இந்து சமய மக்களுடன் கலந்துகொண்டேன். நாங்கள் காயத்திரி மந்திரத்தையும் கூறினோம். இந்து பாரம்பரிய மாதத்திற்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.