தடுப்பு சுவரில் கார் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாப பலி..

கோவை:திருப்பூர் மாவட்டம் ,பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் ஜி. கே .ரவி (வயது 58) தற்போது சூலூர் ஓடக்கல் பாளையம் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சுல்தான் பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் காரில் ஒடக்கல்பாளையம்- சுல்தான்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள எஸ். எஸ். நகர். அருகே சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறிரோடு ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதியது.இதில் கார் ஓட்டிச் சென்ற ரவி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மனைவி உமாதேவி சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுவிசார ணை நடத்தினார்.