குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் நீர் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.