கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் சேர்ந்த ஜமேஷாமுபின் இறந்தார். மேலும் அந்த பகுதியில் ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ( என் ஐ.ஏ) இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 27ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கையில் கார் வெடித்ததில் இறந்த ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும்” பென்டரித்ரிட்டால்” டெட்ராநைட்ரேட் (பி.இ.டி.என்) மற்றும் நைட்ரோ கிளிசிரின் ஆகியவை கைப்பற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் .இது தவிர பொட்டாசியம் நைட்ரேட் அலுமினியம் பவுடர் ,ரெட் பாஸ்பரஸ் உட்பட 100 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பி.இ.டி என்.மற்றும் நைட்ரோகிளிசிரின் ஆகியவை பலத்த சேதம் ஏற்படுத்தும் திறன் கொண்டது. இதனை இராணுவத்தினர் மற்றும் சுரங்க தொழிலில் ஈடுபடுவோர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இதுபோன்ற வெடி மருந்து வாங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகள் உள்ளன. இதனை மீறி ஜமேஷா மு பினுக்கு இத்தகைய அதிபயங்கர வெடிபொருட்கள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த பயங்கர வெடிபொருட்களை ஜமேஷாமுபின் வாங்குவதற்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது .எனவே அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் தேசிய புலனாய் முகமே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், ஜமேஷா முபின் மற்றும் 6 பேரின் வீடுகளில் சோதனை நடத்தவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களுடன் கடந்த மாதங்களாக தொடர்பில் இருந்தவர்கள் யார்? செல்போனில் யாருடன் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0