செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து இன்று பிற்பகலில் நீர் திறக்கப்பட உள்ளது. ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் கால்வாய் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நாரபாரி குப்பம் வடகரை, சாமியார் மடம், பாபா நகர் மணலி ,கொசப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. உபரி நீர் வெளியேறுவதால் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 1150 கன அடியாக நீர் வரத்து உள்ளது . தொடர் கனமலையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
புழல் ஏரிக்கு நீர் வரத்து 967 கன அடியாக அதிகரித்திருக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2536 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ள உள்ளது . குடிநீருக்காக புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்திற்கு ஏற்ப உபரி நீர் வெளியேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.