பணகுடி: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனை நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் வெற்றிகரமாக நடந்தது.
இந்த சோதனை 28 விநாடிகள் நீடித்தது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை 28 விநாடிகள் நீடித்தது. இது வெற்றிகரமாக நடந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.