காரின் பின் வரிசையில் நடுவில் உள்ள இருக்கைக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்டுகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பொதுவாக கார்களில் முன்வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின் வரிசையில் இரண்டு ஓரங்களிலும் உள்ள இருக்கைகளுக்கு மூன்று பாயின்ட்(மும்முனை) சீட் பெல்ட் வழங்கப்படுகிறது. ஆனால், பின்வரிசையில் நடுவில் உள்ள இருக்கைக்களுக்கு இருமுனை சீட் பெல் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில்,காரின் பின் வரிசையில் மத்தியில்(நடுவில்) உள்ள இருக்கைக்கும் 3-பாயின்ட்(மும்முனை) சீட் பெல்ட்டுகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்,பின்புற நடு இருக்கைகளுக்கு மூன்று-பாயின்ட் சீட் பெல்ட்களை வாகன உற்பத்தியாளர்கள் கட்டாயம் வழங்க உத்தரவிடும் கோப்பில் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அந்த வகையில்,விமானத்தில் பயன்படுத்துவது போன்று ஆங்கில எழுத்தான ஒய் வடிவில் உள்ள சீட் பெல்ட்தான் அனைத்து கார் இருக்கைகளிலும் பொருத்த வேண்டும் என்பது கட்டாயம் ஆகிறது.
இதனைத் தொடர்ந்து,இதனால் கார் பயணம் பாதுகாப்பானதாக ஆகிவிடும் எனவும்,மோதல்கள் அல்லது கடினமான பிரேக்கிங் ஏற்பட்டால்,இருமுனை பெல்ட்களுடன் ஒப்பிடும்போது,மும்முனை சீட் பெல்ட்கள் பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து,”ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேர் இறக்கின்ற நிலையில்,சாலை விபத்து தொடர்பான உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக,8 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய கார்களில் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளை வழங்குவதை கார் தயாரிப்பாளர்கள் கட்டாயமாக்க வேண்டும் என கடந்த மாதம் ஜனவரியில் மத்திய அரசு கூறியிருந்தது.அதன்படி,இந்த விதி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.