கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி தங்கமணி . இவர்களது மகள் மோகனாம்பாள் (வயது 34) இவர் பிறவியில் இருந்து மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 26ஆம் தேதி வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவரது உடலில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் தங்கமணி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0