தமிழ்நாட்டில் துணை வேந்தர் பதவி ரூ.40 முதல் 50 கோடிக்கு விற்பனை – பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு..!

மிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் பஞ்சாபில் ஒரு அரசு விழாவில் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “நான் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தபோது தமிழ்நாட்டின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ. 40 முதல் 50 கோடிக்கு விற்கப்பட்டு வந்தது. மேலும், தமிழ்நாட்டின் 27 பல்கலைக்கழக துணைவேந்தர்களை சட்டப்படி நியமனம் செய்தேன். என்னிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு பஞ்சாபில் யார் தகுதியானவர்கள் என்றெல்லாம் தெரியாது. ஆனால், கல்வி தரம் உயர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்” எனப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் துணை வேந்தர் பதவிகள் விற்கப்படுகிறது என முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே இவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்தபோது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஆளுநர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என அப்போது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.