தீபாவளிக்கு துணி எடுக்க வந்த 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொடூர கொலை – கோவை கல்லூரி மாணவர் கைது..!

கோவை அருகே உள்ள சுந்தராபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கவிராஜ்.இவர் இறந்து விட்டார்.இவரது மகன் பரத் என்று கிருஷ்ணராஜ் (வயது 17) இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக பரத் தனது நண்பர்களுடன் நேற்று மாலை கோவை ராஜவீதிக்கு வந்தார். அவர்பஸ்சை விட்டு இறங்கி ராஜவீதி, மணிக்கூண்டு, டி.இ.எல்.சி சர்ச் முன் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. படிக்கும் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்தோஷ் (வயது 17)அங்கு வந்தார். பள்ளியில் படிக்கும் போது ஏற்கனவே நடந்த பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்தை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார் இதில் பரத் நிலை குலைந்து கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பரத்தைமீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரத் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர் .தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க வந்தபோது சிறுவன் கத்தியால் குத்தி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது படுகொலை செய்யப்பட்ட பரத் என்ற கிருஷ்ணராஜும், கைதான கல்லூரி மாணவர்சந்தோசும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். அப்போது யார் பெரியவர்? என்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே போட்டி இருந்து வந்துள்ளது. பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளியே சென்ற பிறகும் அது நீடித்தது. இதனால் கல்லூரி மாணவர் சந்தோஷ் , பரத்திடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.