கடனில் வாங்கிய புல்லட்… கடனை திருப்பி செலுத்த முடியாததால் மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் பழனி பாரதி (வயது 25) கிரைண்டர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். சில நாட் வாரங்களுக்கு முன் நண்பர்களிடம் கடன் வாங்கி புதிதாக புல்லட் பைக் வாங்கினார். அந்த பைக்கில் ஆடம்பரமாக சுற்றி வந்தார். பைக் வாங்குவதற்காக நண்பர்களிடம் வாங்கிய கடனை அவர்கள் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த பழனி பாரதி நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை முத்துக்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.