கோவை வடவள்ளி போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தஒரு வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் தொண்டாமுத்தூரை சேர்ந்த கஞ்சா வியாபாரி விஜய் (வயது 26) என்பது தெரியவந்தது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது விஜய் தனது கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை கழற்றி திடீரென்று விழுங்கிவிட்டார் .அதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து அவரை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்கு இனிமா கொடுத்து மோதிரம் வெளியே எடுக்கபட்ட து .பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார்.போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது கஞ்சா வியாபாரி மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0