இந்தியாவின் முதல் பல்துறை கலாச்சார மையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளதாக ஈஷா அம்பானி அறிவித்துள்ளார்.
நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் என அழைக்கப்படும் இது இந்தியாவின் முதல் பல்துறை கலாச்சார மையமாகும். இது மும்பை, ஜியோ வோர்ல்ட் செண்டர் அமைந்துள்ள வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய மாநாட்டு மையம், சில்லறை வணிக மையங்கள் கொண்ட கட்டிடம் ஜியோ வோர்ல்ட் மையத்தில், கலைக்கூடமாக இந்த மையம் இடம் பெறுகிறது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தும் தளமாக அமைக்கப்படவுள்ள இந்த நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில், தி கிராண்ட் தியேட்டர், தி ஸ்டூடியோ தியேட்டர், தி க்யூப் என 3 முக்கிய அரங்கங்கள் உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இஷா, “நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் என்பது, என் அம்மாவின் கலை, கலாச்சாரம் மற்றும் இந்தியா மீதான அவரது அன்பின் அடையாளம். பார்வையாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரையும் வரவேற்கும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். NMACCயின் நோக்கம் இந்தியாவின் சிறப்புகளை உலகிற்கு காண்பிப்பதும், உலகின் சிறந்த கலைகளை இந்தியாவிற்கு கொண்டுவருவதும்தான்” என தெரிவித்தார்.
தேதி | நிகழ்ச்சி |
மார்ச் 31, 2023 | நமது தேசத்தின் பயணம் |
ஏப்ரல் 1, 2023 | இந்தியா இன் ஃபேஷன் |
ஏப்ரல் 2, 2023 | சங்கம் சங்கமம் |